என்னை பற்றிய ஒரு சிறு அறிமுகம் என்றைக்குமே எனக்கு ஒரு முகம்.

0 Comments
என் வாழ்க்கை என்னும் புத்தகம் அதன் பக்கங்களை சற்று வேகமாக புரட்ட ஆரம்பிக்கும்போது சற்றும் எதிர்பாராமல் அதனுள் அகப்பட்ட சிறு பூச்சி போல சிக்கித்தவிக்கும் நேரத்தில் சிதறிக்கிடக்கும் என் சிந்தையை சீர்படுத்தி கொள்ள சின்னதாய் ஒரு வாழ்க்கை சித்திரம் வரைய நினைக்கிறேன்.

என் வாழ்கையில் நடந்தவை, நடப்பவற்றை அறிந்து கொள்ளமுன்னர் நான் யார் என்பதை தெரிந்து கொள்வது உங்களுக்குள் எழும் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கும்.

என்னுடைய பெயர் தர்ஷன். அழகுரெட்ணம், மலர்விழி தம்பதியின் மூத்த மகனாக 1989 மார்ச் 22ம் திகதி மட்டக்களப்பு அரசினர் பொது வைத்தியசாலையில் பிறந்தேன். மட்டக்களப்பு நாவற்குடாவை வதிவிடமாக கொண்ட எனக்கு இரண்டு சகோதர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். என்னுடைய ஆரம்பம் முதல் உயர்தரம் வரையிலான கல்வியை மட் / புனித மிகேல் கல்லூரியில் தொடர்ந்தேன். நாட்டில் நிலவிய உள்ளூர் யுத்தம்சார் அசாதாரண சூழ்நிலை காரணமாக என்னுடைய உயர்கல்வியைகூட நிறைவு செய்யமால் பிறந்த மண்ணையும், உடன் இருந்த உறவுகளையும் விட்டுவிட்டு நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு முதல் என் குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியாக அமெரிக்காவில் வசித்து வருகிறேன் கடந்த 2012ம் ஆண்டு முதல் Walmart நிறுவனத்தில் Logistics பிரிவில் Quality Assurance ஆக கடமையாற்றி வருகிறேன்.

என்னுடைய பொழுது போக்குகள்.

  • வலைத்தளங்களை வடிவமைத்து பிரசுரிப்பது.
  • உடகத்துறை சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்துவது.
  • நீண்ட தூரப்பிரயாணங்கள் ( வாகனத்தை ஓட்டுவதில் அலாதிப் பிரியம் )
  • புதிதாக அறிமுகம் ஆகும் தொழினுட்பங்களை அறிய முற்படுவதும் பயன்படுத்தி பார்ப்பதும்.
  • உணவுவகைகளை விதம்விதமாக சுவை பார்ப்பது.
  • நேரம் கிடைக்கும் போதெல்லாம் சினிமா. ( தமிழ் சினிமா )
  • இசையை இரசிப்பது. (மொழி கடந்து அனைத்து மனங்கவர் பாடல்களையும் மீண்டும் மீண்டும் கேட்பது, தூரப்பிரயாணங்களின்போது இலங்கையில் இருந்து இயங்கும் தமிழ் வானொலிகளை TuneIn மூலம் கேட்டு மகிழ்வது )


You may also like

No comments: